நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் ஊராட்சியில் மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (09.10.2025) திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.ஸ்ருதி ஆகியோர் உள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள இடங்களில் புதிதாக மதி விற்பனை அங்காடி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மேலாண்மை இயக்குநர் சென்னை அவர்களின் கடிதத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மதி விற்பனை அங்காடிகளை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள இடங்களில் புதிதாக மதி விற்பனை அங்காடி அமைத்திட ரூ. 10.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, சுற்றுலா தளங்களில் மதி அங்காடி அமைப்பதற்காக சுழல் நிதியாக பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 3 இலட்சமும் மற்றும் கணினி அச்சுப்பொறி (Pசiவெநச) வலைதள இணைப்பு பில்லிங் சாப்ட்வேர் (டீடைடiபெ ளுழகவறயசந) மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் செய்திட ரூ. 2 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 5 இலட்சம் (ரூபாய் ஐந்து இலட்சம்;) வழங்கப்படுகிறது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானிய உணவு, தேன், நொறுக்கு திண்பண்டங்கள், இயற்கைமுறை சத்துமாவு, கைவினை பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சந்தை மற்றும் விற்பனை செய்யும் வகையில் நாகப்பட்டினம் வட்டாரம் சிக்கல் ஊராட்சியில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் சன்னதி எதிரில் 12 மகளிர் உறுப்பினர்களை கொண்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவினரால் மதி அங்காடியினை செயல்படுத்திட சுழல் நிதியாக பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 3 இலட்சமும், மற்றும் கணினி அச்சுப்பொறி (Pசiவெநச) வலைதள இணைப்பு, பில்லிங் சாப்ட்வேர் (டீடைடiபெ ளுழகவறயசந) மற்றும் இதர உபகரணங்கள் கொள்முதல் செய்திட ரூ. 2 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 5 இலட்சம் (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மதி அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி எஸ்.சித்ரா, உதவி திட்ட அலுவலர்கள், மாநில ஆத்மாகுழுத் உறுப்பினர் திரு.மகா.குமார், நாகப்பட்டினம் வட்டார ஆத்மா குழு தலைவர் திரு.ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)