• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

Oct 10, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதி அம்மன் புரட்டாசி மாத பூக்குழி திருவிழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் கும்மியடித்து வழிபடுவது முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்ரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை தலைவர் எம் ஆர் வெங்கடேசன் .செயலாளர் செ.முருகன் பொருளாளர் சி .ஜெயராம் மற்றும் ஊர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்