


வேங்கை வயல் விவகாரத்தில் அன்றைக்கே சி.பி.ஐ விசாரனை கோரியது நான் தான். அன்றைக்கு திருமாவளவன் அதனை ஆதரிக்காதது ஏன்? – பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், வேங்கை வயல் விவகாரத்தில் அன்றைகே சி.பி.ஐ. விசாரனை கோரியது நான் தான் என்றும், அன்றைக்கு திருமாவளவன் அதனை ஆதரிக்காத்து ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.


பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட புதிய தலைவராக காரைக்குடியை சேர்ந்த பாண்டித்துரை என்பவரை அன்மையில் மாநில தலைமை அறிவித்தது. இந்நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா, மாநில பொது செயலாளருமான ராமஸ்ரீநிவாசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் மேப்பல் சத்தியநாதன் தற்போதைய மாவட்ட தலைவரை அறிமுகம் செய்து உரையாற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சால்வை அனிவித்து கெளரவிக்கப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் முதலில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்த துறை அமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும் அதற்கு காரணமாக இருந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கும் விவசாயிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், டங்க்ஸ்டன் விவகாரத்தில் மரியாதை தம்புரான் நிலைமைக்கு சென்று விட்டார் தமிழக முதலமைச்சர். அவர் சொன்னதால் திட்டத்தை ரத்து செய்ததாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், பிப்ரவரி மாதம் ஏலம் நடக்கும்பொழுது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர் என்றும், கேள்வி எழுப்பதுடன் முதல்வரின் கருத்தை புறந்தள்ள வேண்டும் எனவும் பேசினார். அதனை தொடர்ந்து வேங்கை வயல் விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றவாளி யார் என்கிற கேள்வி இருந்து வந்தது என்றும், இன்றைக்கு காவல்துறையின் குற்றப்பத்திரிக்கை தாக்கலில் அந்த நபர்கள் யார் என தெரிய வந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அன்றைக்கே சி.பி.ஐ விசாரனைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தவன் நான் தான் என்றும், அன்று திருமாவளவன் ஏன்? அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய அவர், திருமாவளவனின் கோரிக்கையில் பழுது உள்ளது என்றும், அவருக்கு உண்மையான குற்றவாளி தெரிந்து இருந்தால் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் கூறினார்.

மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மாசு படிந்த சார் யார்? என அன்றைக்கு கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பல சார்கள் அந்த வழக்கில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதனை தீவிரமாக மாநில அரசு கையில் எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஈவேராவை காரணம் காட்டி அந்த விவகாரத்தில் மக்களிம் கவனத்தை மடை மாற்ற வேண்டாம் என்றும், ஈவேராவை முதலில் விமர்சனம் செய்தது நான் தான் என்றும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈ.வே.ரா ஒரு தேச விரோதி, ஈ.வே.ரா ஒரு பட்டியல் சமுதாய எதிரி, ஈ.வே.ரா தமிழ் விரோதி என்றும், ஈ.வே.ரா பெண்களை ஒரு போக பொருளாக கருதி விலைக்கு வாங்கி அனுபவித்தவர் என்றும், அவரை சீமான் ஏதோ பொய்யாக விமர்சனம் செய்ததாக கூறி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் கவனத்தை திசை திருப்ப திமுக அரசு முயல்கிறது என்றும் பேட்டியளித்தார். உடன் பா.ஜ.க நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

