• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம்

Byp Kumar

Dec 5, 2022

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம்1991 நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்குஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்தாவூத்அனீஸ் தலைமை தாங்கினார். சிக்கந்தர். அக்பர் பக்ருதீன்அலி. அயூப்கான்மற்றும் தாஜுதீன் முன்னிலைவகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஹைதர்அலிஅக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஜாகிர்உசேன் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், மற்றும் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .

கருத்தரங்குக்கு முன்பாக அக்கட்சியின் தலைவர் .ஹைதர்அலி செய்தியாளர்களிடம் கூறியது: இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான வரலாற்றுப்புகழ் வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு இதுதொடர்பாக வழக்கும் நடைபெற்று இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு அங்கு தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாபர் மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மக்களவையில் 1991வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி 1947}க்கு முன்னர் இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் எப்படி இருந்ததோ அவை அப்படியே இருக்க வேண்டும். அவற்றில் எந்த வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு மக்களவையில் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மத வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்கை நீதிமன்றங்களும் விசாரிக்கக்கூடாது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசும், நீதிமன்றங்களும் அந்த சட்டத்தை மீறி வருகின்றன. அந்த வகையில் கியான்வாபி வழிப்பாட்டுத்தலம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருவது, சட்டத்தை மீறிய செயலாக உள்ளது. எனவே வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991}ஐ மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. விசாரணையில், அவர் இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட பலரை சிறைகளில் சென்று சந்தித்ததாகவும், இணையதளம் மூலம் வெடிபொருள்கள் வாங்கியதாகவும் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. சிறைகளில் முக்கிய வழக்குத்தொடர்பாக அடைக்கப்பட்டுள்ளவர்களை சந்திக்கும் நபர்கள் தொடர்பாக உளவுத்துறை கண்காணிப்பது வழக்கம். ஆனால் சிறைகளில் பலமுறை சென்று சந்தித்து வந்த கோவை குண்டு சிலிண்டர் குண்டு வெடிப்பில் இறந்தவரை உளவு அமைப்புகள் கண்காணிக்க வில்லையா? மேலும் வடமாநிலங்களில் இதுபோன்ற குண்டுவெடிப்புச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளில் இருந்தது தெரிய வந்துள்ளது