• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து உதகை நகர அதிமுக சார்பில் காபி ஹவுஸ் சதுக்கத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.இதில் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.