• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பக்தர்களுக்கு காட்சி அளித்த செல்வ கணபதி விநாயகர்..,

BySeenu

Aug 27, 2025

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து கோவை ரத்தினபுரி சாஸ்திரி சாலை சசிகுமார் திடலில் இந்து முன்னணி 46-வது டிவிஷன் நடத்தும் 33-வது ஆண்டாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ செல்வ கணபதி சிலைக்கு பத்து லட்சம் ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பத்து ரூபாய், இருபது ரூபாய்,50 ரூபாய்,100 ரூபாய்,200 ரூபாய் 500 ரூபாய் வரை ஸ்ரீ செல்வ கணபதி சுற்றி அலங்காரம் செய்யப்பட்டதை கண்டு பக்தர்கள் ஆர்வத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

பத்து லட்சம் சலவை ரூபாய் நோட்டால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டது பொதுமக்கள் வியப்புடன் மற்றும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
மேலும் இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி நகரின் சாஸ்திரி ரோடு பகுதியில் 9 அடி உயரத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பண அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், பாரதிய ஜனதா கட்சி ஓ பி சி அணி தலைவர் சுதாகர், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் சங்கர், பொருளாளர் கிஷோர் குமார், செயலாளர்கள் மனோஜ் குமார், மணி, மற்றும் நகர நிர்வாகிகள் மக்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.