• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மேல்முறையீடு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு ; இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிக்கு 3 ஆண்டு சிறை !!!

BySeenu

Jun 23, 2026

கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராக இருந்து உள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டில் சூர்யாவிற்கும் அங்கு இருந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான பைசல் என்பதற்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சூர்யா தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பைசலை குத்தி உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த பைசலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து பைசல் ரேஸ்கோர்ஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சூர்யா மீது கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணையை ஆனது கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. கடந்த 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யா. குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் படி அவருக்கு கொலை முயற்சிக்கு இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1,000 அபராதம், கொலை மிரட்டலுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு மீது சூர்யா மேல்முறையீடு செய்து இருந்தார். இந்நிலையில் அது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி 1 நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டார். இதை அடுத்து போலீசார் சூர்யா என்ற சூரிய பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.