• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ரூ. 10 கோடி தங்கம் வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவு…

BySeenu

Jun 23, 2026

கோவை பெரிய கடை வீதியில் ரூபாய் 10 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் குஜராத் வியாபாரிகள் தலைமறைவானார்கள் மீது பல்வேறு மாநிலங்கள் மோசடி வழக்கு பதிவாகி உள்ளன.

கோவை, பெரிய கடை வீதியில் தங்க, வெள்ளி கட்டிகளை விற்கும், வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு காம்ப்ளக்ஸில் குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த குமார் சோனி என்பவர் தங்க, வெள்ளி கட்டிகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இவருக்கு விஜய் அம்பாலால் சோனி உதவி செய்தார்.

இவர்கள் கோவையில் உள்ள நகை வியாபாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் தங்கக் கட்டி அல்லது தங்க நகை வியாபாரகளிடம் வாங்கிய லாபம் வரும் வகையில் பணம் கொடுத்தனர். காலையில் தங்கத்தை வாங்கினால், மாலையில் பணம் கொடுத்து விடுவார்கள். இதனால் அவர்களை வியாபாரிகள் நம்பத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அந்த ரெண்டு பேரிடமும் தங்க, வெள்ளி கட்டிகள் மற்றும் நகைகளை வியாபாரிகள் விந்துத்தர கொடுத்தனர். அதன்படி அவர்கள் மொத்தம் ஆறு கிலோ தங்க கட்டிகள், 5 கிலோ வெள்ளிக் கட்டிகளை வியாபாரிகளிடம் விற்றுத் தருவதாக வாங்கினார்கள்.

இந்நிலையில் நேற்று குமார் சோனி, விஜய் அம்பாலால் சோனி ஆகியோர் ரூபாய் 10 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி கட்டிகள் உடன் திடீரென மாயமாகி விட்டார்கள். இதனால் இவர்களிடம் தங்கம், வெள்ளி கட்டிகளை கொடுத்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மோசடி பற்றி தகவல் அறிந்ததும், காவல் ஆணையர் கண்ணன் விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் பெரிய கடை வீதி போலீசார் விசாரணை தொடங்கினார்கள். அப்பொழுது தலைமறைவான குமார் சோனி, விஜய் அம்பாலால் சோனி ஆகியோர் மீது டெல்லி, சூரத், தானே உட்பட பலவேறு நகரங்களில் தங்கக் கட்டி மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோவை காவல்துறையினர் கூறும் பொழுது ;

குமார் சோனி, விஜய் சோனி மோசடி வழக்குகளில் கைதாகி ஜாமினில் வந்து தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். ஓரிடத்தில் மோசடி செய்து விட்டு, வேறு இடத்துக்கு சென்று மீண்டும் மோசடியில் ஈடுபட்டு வந்தார்கள், பொய்யான பெயர்களை பல இடங்களில் கூறி தங்கக் கட்டிகளை வாங்கி ஏமாற்றி இருக்கிறார்கள். தங்க கட்டிகளை கொடுத்தவர்கள் தொடர்ந்து புகார் செய்து வருகிறார்கள். குமார் சோனி மோசடி செய்த தொகையில் கோவையில் தற்பொழுது மோசடி செய்த ரூபாய் 10 கோடி தான் அதிகம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தலைமறைவான குஜராத் வியாபாரிகளை காவல் துறையினர் வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.