தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கு பெறுவதற்கு 7 பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடைபெற்றன.
தென்காசி மாவட்ட சதுரங்க வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டிகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் சாவித்திரி, மகா, கல்லூரி மாணவி தன்னார்வர்கள் உதவியால் நடைபெற்றது. தேர்வு போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த சிறுவர் மற்றும் சிறுமிகள் தென்காசி மாவட்ட பிரதிநிதிகளாக தமிழ்நாடு மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் பங்கு கொள்வார்கள்.
வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு தென்காசி மாவட்ட சதுரங்க வட்ட தலைவர் பெருமாள் தலைமையில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழக துணை செயலாளர் ஆக்சியம் அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தென்காசி மாவட்ட சதுரங்க கழக செயலர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.