தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின் முதல் நாள் சந்திப்பும், அவர் என் மீது காட்டிய பரிவும் அன்பும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. அதன் பிறகு நான் அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன், நேரிலும் சந்தித்து இருக்கிறேன்.
அவர் என் வளர்ச்சியை பாராட்டியது மட்டுமல்ல குறைகளையும் சுட்டிக் காட்டி அறிவுரை வழங்கினார். ஒரு மாபெரும் தலைவராக இருந்தும் சின்ன சின்ன விஷயங்களை கண்காணித்து ஒரு தந்தையை போல என் மீது அவர் அக்கறையுடன் நடந்து கொண்ட விதத்தை நினைத்து பார்த்து பலமுறை நான் ஆச்சரியப் பட்டு இருக்கிறேன். அவரை சந்திக்க வேண்டுமென்றால் அப்பா உங்களை சந்திக்க வரவேண்டும், எப்போது ஓய்வாக இருப்பீர்கள் என்பேன்.அப்போது, அப்பாவைப் பார்க்க பிள்ளைக்கு நேரம் வேண்டுமா? தாராளமாக வா… என்பார் சிரித்துக் கொண்டே… அவரை சந்தித்துப் பேசினால் நேரம் போவதே எனக்கு தெரியாது. நான் தமிழ் படிப்பதற்காக பல புத்தகங்களையும் அவர் எனக்கு வழங்கி இருக்கிறார் என்று கலைஞர் கருணாநிதி பற்றி பல்வேறு கருத்துக்களை குஷ்பூ பகிர்ந்துள்ளார்.