• Wed. Mar 22nd, 2023

கடலாடி குடிநீர் திட்ட குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடலாடி வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருவதால் குடிநீர் திட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றுக்குள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. ராஜகம்பீரத்திலிருந்து கடலாடி வரை சாலை ஓரத்தில் குழிதோண்டி அதில் பைப் லைன் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மானாமதுரை அருகே சங்கமங்கலம் என்ற இடத்தில் கடலாடி குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கடலாடி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முழுமையாக குடிநீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் தண்ணீரை சங்கமங்கலம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பாட்டிற்காக குடங்களில் பிடித்து வீடுகளுக்கு கொண்டு செலகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தினர் மேற்கண்ட குழாய் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து கடலாடிக்கு முழுமையாக தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *