தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டு பிரதமர் மோடிக்கு பரிசளித்து வழி அனுப்பிவைத்தார்.
நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார்.நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின் இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் போர்டு பரிசளித்து பிரதமரை வழி அனுப்பிவைத்தார்.