• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

வாரத்தின் 6 நாட்களும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.. இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன..

அந்த வகையில் புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.. எனினும் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது..

இந்நிலையில், தற்போது, பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது… புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. பள்ளிகள், கல்லூரிகள் வாரத்தின் 6 நாட்களும் முழுமையாக இயங்கும் எனவும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.