

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பொன்நகர் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று பொன்நகர் வளைவை கடக்க முயன்ற போது பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து நேராக உள்ள வீட்டின் முன் கழிப்பறையின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது வீட்டின் முன்பு படித்து கொண்டிருந்த 13 வயது மாணவியின் காலில் கழிப்பறையின் கல் விழுந்து சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் அப்பள்ளி வாகனத்தில் மாணவ மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


