• Fri. May 10th, 2024

பல்லடம் அருகே அருள்புரம் கேஎம்சி சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு விழா!!

ByS.Navinsanjai

Apr 27, 2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் கேஎம்சி சட்டக் கல்லூரியில் ‘தீரா உலா 2024’ என்ற பெயரில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பும், புதுடெல்லி பார் கவுன்சில் அங்கீகாரமும் பெற்று, கடந்த 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினராக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு சட்டக் கல்வி முன்னாள் இயக்குனருமாகிய ஆர். சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குப்தா மாணவர்களிடயே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்..,

தான் சட்டப் படிப்பை முடித்த பின் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் பல நூறு பக்கங்கள் இருந்தாலும், அதன் சாராம்சங்களான நான்கு பக்கங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.பாராளுமன்றத்தில் சட்ட மசோதாக்கள் தாக்கலின் போது, கப்பில் சிபிள் போன்ற சட்ட மேதைகளால் நடத்தப்படும் விவாதத்தை ஆவலுடன் கவனித்து அதன் நுட்பங்களை ஆராய்ந்து கற்க வேண்டும் என்றார்.
மேலும் சட்ட மசோதா விவாதங்களில் தொடங்கி சமீபத்திய தீர்ப்புகள் வரை அறிந்திருந்தால் தான் உங்கள் மீதான கௌரவம் உயரம். அப்பொழுது தான் உங்கள் வாதத்திறமையை வளர்த்து,வழக்கறிஞர் தொழிலையும் மேம்படுத்த முடியும் என்று அறிவுறுத்தி வாழ்த்தினார்.இவ்விழாவில் கேஎம்சி சட்டக் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.எஸ். சௌந்தர பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் தாளாளர் அருணாஸ்ரீதேவி வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *