குமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் குடி நீர் கட்டணத்தை உயரத்தியதை கண்டித்து, ம தி மு க சார்பில் அக்கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம் தலைமையில் செயல் அலுவலரிடம் குடி நீர் கட்டணம் தற்போது வசூலிக்கும் கட்டுமான ரூ.138.00 உயர்த்தக் கூடாது என மனு கொடுத்தனர்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில். பேரூராட்சி கவுன்சிலர்களின் செயல் பாடுகள் இல்லாத நிலையில். குடி நீர் கட்டணத்தை உயர்த்திய செயல் அலுவரது செயலுக்கு மதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்ததோடு தேர்தல் நடவடிக்கை அமுலில் இருக்கும் கால கட்டத்தில் செயல் அலுவலர் எந்த அதிகாரத்தில் குடி நீர் கட்டணத்தை உயர்த்தப்படுவதாக செயல் அலுவலரது அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.