• Sun. May 19th, 2024

வனத்தினுள் வான்உயர மரங்கள் பச்சை இலை குடைபிடிக்க கோடை விடுமுறை விழிப்புணர்வு முகாம்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ் நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட கால நிலை மாற்ற இயக்கம் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். காளி தேசத்தில் கடந்த (ஏப்ரல்-26)ம் நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 10பள்ளிகளிலிருந்து, பள்ளி 100 மாணவர்களும் ஒரு ஆசிரியர், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

வனத்தினுள் கரடு , முரடான வழித்தடத்தில் வான் மேகங்கள் உயர்ந்த மரக்கிளைகளை தொட்டு நலம் விசாரித்து கடந்து செல்லும் புத்தம், புதிய காட்சியை மாணவர்களின் கண்கள் அகல விரிய புதிய, புதிய காட்சிகளை முதல் முதலாக பார்த்தார்கள்.

காய்ந்த சருகுகளை விதைத்தது போல் தரையெங்கும் பரவி கிடக்க. சருகுகளில் மாணவர்களின் பாதங்கள் படும் போதும் எழும் ஒரு புதிய ஓசை மாணவர்களின் காது சென்று ஒலித்தது.

உயர்ந்த மரக்கிளைகளைகளின் இடையே புகுந்து வரும் ஒளி வனத்தின் காய்ந்த சிறு,சிறு ஒளி வட்டம் தரையில் இருந்து ஒரு ஒளிவட்டம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டல் போல் மாணவர்கள் புதிய அனுபவங்களால். வனத்தின் கரடு முரடான பாதையில் நடந்தாலும்,காலின் வலியை உணராது உற்சாக மனத்துள்ளலில் வனத்தினுள் நடந்த 100 மாணவர்களுக்கு. வனத்துறை அதிகாரிகள் வனத்தினுள் வாழும் மனிதர்கள், பல்வேறு வகையான மிருகங்கள் அவர்களாகவே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டுள்ள அதிசயம் பற்றியும். நாட்டுக்குள் இருக்கும் நிலைக்கு முற்றிலும் எதிர் திசையில் இயற்கையின் தன்மை பற்றி நேச்சர் பவுண்டேஷன் வல்லுனர்களால் மாணவர்களுக்கு விளக்கமாக ஒவ்வொன்றையும் எடுத்து சொன்னார்கள். குறிப்பாக வனத்தினுள் உள்ள கால நிலை மாற்றம் மற்றும் மழையின் அளவு பற்றி முழுமையாக விளக்கம் அளித்ததோடு. மாணவர்களுக்கு.வனம் அதன் தன்மை,கால நிலை, வனத்திற்குள்,மனிதர்களும், பல்வேறு வகையான மிருகங்கள் எப்படி எல்லை வகுத்துக்கொண்டு ஒன்றாக வாழ்கிறார்கள் என்பது பற்றி ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியது போல் நடத்திய பின், வனப்பகுதி பற்றிய வினாடி வினா நடத்தினார்கள். குறிப்பாக வனத்துறையால் காட்டில் விளையும் காய்கறிகளில் மற்றும் காட்டு கிழங்கால் சமைத்த உணவு பரிமாறப்பட்டது.மாணவர்கள் இதுவரை உட்க்கொண்ட உணவுகளை விட புதிய சுவையை உணர்ந்ததாக அவர்களின் வழி காட்டி களிடம் தெரிவித்தார்களாம்.

நேரம் கடந்து அந்தி மாலையை தொட்டபோது,வனத்தினுள் ஒரு கருமை நிறம் சூழ்ந்த நிலையில். அதுவரை மாணவர்கள் கேட்காத பல பறவைகளின் வெவ்வேறு குரலை புதிதாக கேட்டது பல்வேறு பறவைகளின் வெவ்வேறு ஒலியின் தன்மை. சில மாணவர்களின் வீடுகளில்”காதல் பறவைகள்” வளர்ந்துவரும் வீடுகளில் கேட்ட பறவைகள் ஓசையை விட புதிய ஓசை என சக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டது, அவர்களது புதிய அனுபவம்.

வனத்திற்குள் சென்ற 100_மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுவரொட்டிகள், மற்றும் வனம் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.

கோடை விடுமுறை நாட்களில். கடும் வெயில் காலத்தில். நிழல் படர்ந்த வனத்தினுள் ஒரு கல்வி சுற்றுலாவுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்துடன் மங்கிய மஞ்சள் இருள் பரவும் மாலை நேரத்தில் அடர்ந்த வனத்தை விட்டு சம வெளிக்கு புதிய அனுபவத்துடன் மாணவர்கள் அவர்களது இல்லம் சென்றார்கள்.

மாணவர்களை வனத்தினுள் தடம் பார்த்து அழைத்து சென்ற.அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் மற்றும் சரக பணியாளர்களிடம். வனதினுள் 100_மணவர்களின் சுற்றுலா பற்றி கேட்டபோது. நாங்கள் எங்கள் வயதை மறந்து அந்த மாணவர்களோடு மாணவர்கள் ஆகி விட்டோம். எங்கள் பள்ளி நாட்களில் வனம் சென்று பார்ப்பது என்பது நடக்காதது. இன்றைய மாணவர்கள் அதிர்ஷ்ட சாலிகள். இன்றைய மாணவர்கள் மத்தியில் கேள்வி ஆற்றல் அதிகம் இருப்பதை இந்த மாணவர்களிடம் காண முடிந்தது என ஒரே குரலாக அதிகாரியும்,சரக பணியாளர்களும் தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *