சிவகங்கை கற்பூர சுந்தர பாண்டியன் இராமலெட்சுமி மேனிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார் மாணவர் சிவா. இவர் சிவகங்கையில் இருந்து 5 கி.மீ தொலையில் உள்ள வஸ்தாப்பட்டி கிராமத்தில் உள்ளார். உடல்நலமின்றி இரண்டு நாள் பள்ளிக்கு விடுமுறை எடுத்த நிலையில் வருகின்ற திங்கள் (18.03.2024)கிழமை சிறப்புத் தேர்வு நடைபெறும் உள்ள நிலையில் மாணவரின் கல்வி நலன் கருதி அப்பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் வழிகாட்டுதல் அடிப்படையில் பள்ளியின் தமிழாசிரியர் இளங்கோ சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வஸ்தாப்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் சிவா இல்லத்திற்குச் சென்று , சிறப்புத் தேர்விற்கான பாடப்பகுதிகளைக் குறித்தும் , மாணவர் பள்ளிக்கு வருகை குறித்தும் பேசினார்.