• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை

ByG.Suresh

Apr 24, 2024

சிவகங்கை நகர் ஸ்டேட் பாங்க் அருகே வார சந்தை வாரம் தோறும் புதன்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம். இதில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் மீன்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இவர்கள் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்காக கடந்த ஆண்டு சிவகங்கை நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ3.89 கோடி மதிப்பிலான புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. பணி நினைவு பெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் பயன்பாட்டிற்கு வராததால் வியாபாரிகள் சாலை ஓரங்களில் பாதுகாப்பற்ற முறையிலும், சுகாதாரமற்ற முறையிலும், கோடை வெயிலால் தற்காலிக மறைப்புகளைக் கொண்டு விற்பனை நடைபெறுகிறது. மேலும் கூட்ட நெரிசலால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிய வாரச்சந்தை கட்டிடத்தை உடனடியாக பயன்படுத்திக் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும் பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.