சிவகங்கை நகர் வார்டு எண் 6,7,9க்கு உட்பட்ட பாகம் எண் 106,107,112க்கு உட்பட்ட பகுதிகளில் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நகர் இலக்கிய அணி ரமேஷ் ஏற்பாட்டில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பில் வீடு மற்றும் கடை பகுதிகளில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது.
இந்நிகழ்வில் தலைமைக் கழக பேச்சாளரும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சிவமுத்துவளவன் அவர்களும் பாகபொறுப்பாளர் ஜெயகாந்தன், சதீஷ்குமார், அமுதன் மற்றும் வட்ட செயலாளர் சண்முகம், சதீஷ் பாண்டி, பாக முகவர்கள் ரமேஷ், சேகர், சதீஷ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆடிட்டர் தனபாலன் கருணாநிதி, தேவஸ்தான முருகேசன், ராஜா சர்புதீன், ஆறுமுகம், தாமு, விஸ்வநாதன், மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் இணைந்து தீராவிட மாடல் அரசின் நலதிட்டங்களை எடுத்துகூறி வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொன்டனர்.