

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதன் காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவு சேர்ந்து வருகிறார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.செப்டம்பரில் காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பு வரை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
