• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தி. சு. சதாசிவம் நினைவு தினம் இன்று..!

Byகாயத்ரி

Feb 5, 2022

தமிழக எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நடிகரும் ஆனவர் தி. சு. சதாசிவம். கலை, இலக்கியம், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என்று பல துறைகளில் அறியப்பட்டவர்.

பல திரைப்படங்களிலும், பத்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார். சதாசிவம் தமிழ்நாடு, திருப்பத்தூரில் பிறந்தார்.

இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை பெங்களூரில் கழித்தார்.

கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி எனப் பல மொழிகளில் இருந்து 25க்கு மேற்பட்ட அவரது மொழிபெயர்ப்புகள் தமிழில் நூல்களாக வெளிவந்திருக்கின்றன.1997-இல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ்பெற்ற கன்னடப் புதினத்தை மொழிபெயர்த்ததற்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

சதாசிவம் இடதுசாரி கலை-இலக்கிய வட்டங்களிலும் தமிழ்த்தேசிய, தலித் இயக்கங்களிலும் முனைப்புடன் பங்கேற்றார். சாகித்ய அகாதமி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார். பல கலைகளை கற்ற தி. சு. சதாசிவம் நினைவு தினம் இன்று..!