தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை இயக்கம் கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகம் சார்பாக அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருஉருவச் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா போட்டிகள் நடைபெற்றது. அதில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் ஹரிணிகா ஸ்ரீ தனுஸ்ரீ ஆகியோர் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 3000 ரொக்க பரிசினை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அம் மாணவிகளை பள்ளிச் செயலர் ஏ. எம். சேகர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.