• Mon. Jan 20th, 2025

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார்…

ByG.Suresh

Jan 5, 2025

சிவகங்கையில் அதிமுக மாவட்ட செயலாளரை மாற்றக்கோரிய போஸ்டர் ஒட்டியது யார்? என்பதில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியினர் மாறி, மாறி புகார். மீண்டும் எடப்பாடி அணியினர் பொய் குற்றச்சாட்டை தொடர்ந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிகொண்டு வரும் சூழ்நிலை உருவாகும். ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன் எச்சரிக்கை விடுத்தார்.

சிவகங்கையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை மாற்றக் கோரியும், கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க விற்கு அடுத்து மூன்றாவது இடத்திற்கு அதிமுக படுகுழியில் தள்ளிய சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் P.R. செந்தில்நாதன் MLA வை மாற்றிட வேண்டும் என சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உண்மை விசுவாசிகள் என்ற பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதற்கு அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஓபிஎஸ் அணியினர் தான் ஜாதி பிரச்சனையும், கட்சிக்குள் உட்கட்சி பூசலை ஏற்படுத்துவதாகவும், சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உட்கட்சி பூசலை மூடி மறைக்க எங்களை குற்றம் சாற்றுவதா? என்று தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் சிவகங்கை நகர் ஆய்வாளரை சந்தித்து புகார் கொடுத்தனர். பின்னர் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் அசோகன் அளித்த பேட்டியில், எடப்பாடி அணி நிர்வாகிகள் எங்களுடைய மாவட்ட மாணவர் அணி செயலாளர் மாரிமுத்து மீது தவறான பொய் புகார் கொடுத்ததால், விசாரணை நடைபெற்று வருகிறது. எடப்பாடி அணியினரே போஸ்டர் அடித்த விட்டு உட்கட்சி பூசலை மறைக்க OPS அணியை சேர்ந்த எங்கள் நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுப்பது வாடிக்கையாகி விட்டது என்றார். இதுவே கடைசி எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றார். அவர்கள் துரோகத்தின் வழியில் செல்கிறார்கள். நாங்கள் தர்மத்தின் வழியில் செல்கிறோம் தர்மம் தான் வெற்றி அடையும் என்றார். மீண்டும், மீண்டும் சீண்டினால் கடுமையான விளைவாக இருக்கும் என்றவர் எடப்பாடி அணி நிர்வாகிகள் ஊழல்கள் பார் – க்காக கொடுத்த 80 லட்சம் ஊழல் குற்றசாட்டுகளை வெளி கொண்டு வரும் சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.