• Thu. Apr 25th, 2024

புதினா சாதம்:

Byவிஷா

Mar 9, 2022

தேவையானவை:
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 1, அன்னாசிப்பூ – 1, மிளகு – 1 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 6 இலிருந்து 7 இரண்டாக வெட்டியது, தக்காளி சின்ன சைஸ் – 1 பொடியாக நறுக்கியது. பூண்டு – 20 பல் தோல் உரித்தது, இஞ்சி – 10 கிராம் தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டியது. தேங்காய் துருவல் – 1ஃ2 கப், ஒரு கைப்பிடி அளவு புதினா, கொஞ்சம் போல கொத்தமல்லித்தழை.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி, முதலில் பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மிளகு, இந்த மசாலா பொருட்களை சேர்த்து 30 வினாடிகள் வதக்கி, அதன் பின்பு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு இஞ்சி, இவைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அதன் பின்பாக தேங்காய் துருவலையும், புதினா கொத்தமல்லி தழையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி விட்டு, இந்த கலவையை தனியாக தட்டில் மாற்றி, ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு கொஞ்சம் போல தண்ணீர் விட்டு கால் டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்
அடுத்ததாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் சோம்பு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 நீள்வாக்கில் வெட்டியது, பிரியாணி இலை – 1, இவைகளை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்குங்கள்.
2 கப் அளவு பாசுமதி அரிசியை கழுவி, 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊறிக் கழுவி தயாராக இருக்கும் அந்த அரிசியை குக்கரில் இருக்கும் விழுதோடு சேர்த்து இரண்டரை கப் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, இறுதியாக அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஊற்றி, பிரியாணியை நன்றாக கலந்து விட்டு, மிதமான தீயில் ஒரு விசில் வைத்தால் மட்டும் போதும். கமகம வாசத்தோடு ஒரு புதினா பிரியாணி வெரைட்டி ரைஸ் தயார் ஆகி இருக்கும். இதற்கு கூட வெங்காய பச்சடி இருந்தாலோ அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்துக்கொண்டு சூப்பராக சுவையாக சாப்பிட்டு விடலாம்

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *