

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 250 கிராம், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு சிறிய கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்து அரைக்கவும். துவரம் பருப்பை வேகவைக்கவும். கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து வேகவிடவும். இதனுடன் அரைத்து வைத்த பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.
இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
