• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி:

Byவிஷா

Apr 7, 2022

உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பச்சரிசி – அரை டம்ளர், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல், தேங்காய் – அரை மூடி

செய்முறை:
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும். இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.
தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். எட்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம். சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி.