• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புரோட்டீன் அடை:

Byவிஷா

Aug 27, 2022

தேவையானவை:
இட்லி அரிசி – 200 கிராம், முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, உப்பு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து வைக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு வகைகள். காய்ந்த மிளகாய். மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கத்தால் சுவையான புரோட்டீன் அடை ரெடி