• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 29, 2022

ஆனியன் ஓட்ஸ் பக்கோடா:

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 2 கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் 2, இஞ்சி - 1 துண்டு, கருவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன், மிளகாய் தூள் - 1 ஸ்பூன், தனியா பொடி - 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன், தண்ணீர், எண்ணெய் - வறுக்க

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அளவு மாறாமல் கலந்துகொள்ளுங்கள். இறுதியாக தண்ணீர் போதுமான அளவு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய வையுங்கள். சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள். அவ்வளவுதான் ஆனியன் ஓட்ஸ் பகோடா தயார்.