தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப், வாழைக்காய் – 1ஃ4 கப், உப்பு – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் – 1ஃ2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகம் – தலா 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – 1ஃ2 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வாழைக்காயை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கீரை கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை வெந்ததும் வெந்த வாழைக்காய் சேர்த்து நன்றாக கிளறி மேலே கரம்மசாலாத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும். சாதத்துடன் பரிமாறவும்.
வாழைக்காய் கீரை கறி:
