தேவையானவை:
நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி – 1 கப், வெனிலா அல்லது ரெகுலர் சோயா மில்க் – 2 கப், சர்க்கரை – 2 டீ ஸ்பூன், தேன் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெரியையும் சர்க்கரையும் மிக்ஸியில் மைய அரைத்து கொண்டு பிறகு மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து ஒரு ஓட்டு ஒட்டி எடுத்து கண்ணாடி கிளாஸில் ஊற்றி ஐஸ் கியூப்ஸ் போட்டு ஜில்லென்று குடிக்கவும். ஸ்ட்ராபெரிக்கு பதில் பிடித்த பழங்களை சேர்க்கலாம்.