• Thu. Sep 28th, 2023

வெந்தயக்கீரை ரைஸ்

Byவிஷா

Apr 15, 2022

தேவையானவை:
பச்சரிசி – 2 கப், வெந்தயக்கீரை – 2 கட்டு, வெங்காயம் – 2, தக்காளி – 3, இஞ்சி – சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு – 8 பல், பச்சை மிளகாய் – 4, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் – அரை மூடி (பால் எடுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு… பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கவும். பிறகு வெங்காயம், வெந்தயக்கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள். சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு தேங்காய்ப்பால், 4 கப் நீர், உப்பு, அரிசி சேர்த்து நன்கு கிளறி, குக்கரை மூடி வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை ‘சிம்’மில் வைத்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *