• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நோ சொன்ன சமந்தா! ஒகே சொன்ன அனுஷ்கா!

கன்னட படம் ஒன்றில் சமந்தா நடிக்க மறுத்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி கமிட்டாகி உள்ளார்.

‘இரண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களோடு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்! பின், பாகுபலி திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது! ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தபோது, படத்திற்காக உடல் எடை கூடி குண்டாக மாறினார். ஆனால், அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.

அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், கன்னட படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகப் பின்னணி பாடகி நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாக உள்ள படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்திற்காக சமந்தாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதால் இந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளது.

மேலும், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அனுஷ்கா. பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை..