நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படம் குறித்தும் நடிகர் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பீஸ்ட் திரைப்படம்..சிவகார்த்திகேயன் சார் நடிப்பில் வெளியான டாக்டர் படம் போல இருக்கும்..விஜய் சார் மிகவும் அருமையாக நடித்துள்ளார். விஜய் சார் மிகவும் அன்பானவர், நான் பணியாற்றியதில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர் என்று நான் நினைக்கிறேன். 64 படங்களில் நடித்தது போல இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தார்.. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ” என கூறிஉள்ளார்.