தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா கைவசம் தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் உள்ளன.
நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் சமந்தா படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், விவாகரத்துக்கு பிறகு ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் சமந்தா தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.