அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தயும் எச்.வினோத் தான் இயக்க போறாரு. இந்தப்படத்துல, நடிகர் அஜித், ஹீரோ, வில்லன்-ன்னு இரட்டை வேடத்தில நடிக்க இருக்காரு! இந்த படம், மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் பாணியில வங்கிக் கொள்ளைய மையமா வச்சு தயாராக உள்ளதா தகவல்கள் வெளியாகியிருக்கு!
இந்நிலையில, நடிகர் அஜித்குமார் கேரளாவுல உள்ள கோயிலுக்கு சென்றுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருது. கேரள மாநிலம் பாலக்காட்டுல உள்ள கல்பாதி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிகாலை 5 மணிக்கு வெள்ள வேட்டி, வெள்ளை துண்டோட மனம் உருகி பிரார்த்தனை செஞ்சு இருக்காரு! இந்த புகைப்படங்கள் இணையத்தில வைரலாகிட்டு வருது!
இப்படியிருக்க, அஜித்குமார் குரு கிருபா ஆயுர்வேத பாரம்பரிய சிகிச்சை மையத்துக்கு சிகிச்சைக்காக போய் இருப்பதா இணையத்தில தகவல்கள் பரவி வருது! ஆனா இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகல!