• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Jul 16, 2022

சாக்லேட் பிஸ்கட் பால்ஸ்

தேவையான பொருட்கள்:

மில்க் பிஸ்கட்ஸ் – 12
கோகோ பவுடர் – 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் – 1/4 டின்
கேக் ஸ்பிரிங்க்ஸ் – 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் – 1/4 கப்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும். பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும். சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும். சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். பொடித்த நட்ஸ் வகைகளிலும் பிரட்டி எடுக்கலாம். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி…