• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலில் வருகின்ற 10-ந் தேதி”கந்த சஷ்டி திருவிழா”..,

ByKalamegam Viswanathan

Oct 23, 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டில் தீபாவளிக்கு மறுநாள் கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் கழித்து காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. ஆகவே கோவிலில் இடம் பிடிக்க தீபாவளி நாளிலே வர வேண்டிய அவசியம் இல்லை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு மறுநாள் காப்பு கட்டுதலுடன்”கந்த சஷ்டி திருவிழா” தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் வழக்கம் போல இல்லாமல் தீபாவளிக்கு மறுநாளைக்கு மறுநாள் ( 1 நாள் கழித்து)கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. அதாவது வருகின்ற நவம்பர் மாதம் 8-ந் தேதி (8-11-2026 ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருகிறது.

மறுநாள் 9-ந் தேதி (9 – 11 – 2026 ந் தேதிதீபாவளிக்கு மறுநாள்) வழக்கப்படி இந்த நாளில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கும் என்று பக்தர்கள் நினைக்க கூடும். ஆனால் வழக்கம் போல தீபாவளிக்கு மறுநாள் 9-ந் தேதி (திங்கட்கிழமை) கந்தசஷ்டி திருவிழா தொடங்கவில்லை. வழக்கத்திற்குமாறாக 10-ந்தேதி (10-11-2026) காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

பொதுவாக கடந்த காலங்களில் தீபாவளிக்கு மறுநாள் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதால் தீபாவளியை அவசரம் அவசரமாக காலையில் கொண்டாடிவிட்டு மதியம் 2 மணிக்கு பிறகு விரதம் இருக்க கூடிய பக்தர்கள்கோவிலுக்கு வந்து கோவிலுக்குள் 6 நாட்கள் தங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு இடம் பிடிப்பார்கள் ஆனால் இந்த ஆண்டில் முழுமையாக தீபாவளியை வீட்டில் கொண்டாடிவிட்டு 9-ந் தேதி கோவிலுக்கு வந்து இடம் பிடித்து 10-ந் தேதி காப்பு கட்டி விரதம் தொடங்கலாம்.
வருகின்ற 10-ந் தேதிகந்த சஷ்டி திருவிழா தொடங்கும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணியளவில் முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்தியான”வேல் வாங்குதலும்”, 15 – ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் சன்னதிதெருவில் சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனம்பிகையிடம் பெற்ற சக்திவேல் கொண்டு அசுரனை வதம் செய்யக்கூடிய சூரசம்ஹார லீலையும் நடக்கிறது

பாக்ஸ் – 1 செய்தி
குன்றத்தில் 17 நாள் இடைவிடால் 2திருவிழா :

கந்த சஷ்டி திருவிழா நிறைவு நாளில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள்
கந்தசஷ்டி திருவிழாவும், கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழாவும் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ஐப்பசி 30 – ந் தேதி(16-11-2026) திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழா தொடங்குகிறது. இதே நாளில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக காலை 8 மணி முதல் 9மணியளவில் கிரிவலத்தில்சட்டத் தேர்பவனியும் மாலை 4 மணியளவில் கந்த சஷ்டி திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரச னைவதம் செய்த முருகப்பெருமானை சாந்தப் படுத்தக்கூடிய “பாவாடை தரிசனம்” நடக்கிறது.

இதனையொட்டி கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு 100 படி அரிசி சாதத்தில் 25 லிட்டர்தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவறையில் முருகப்பெருமானுக்கு “தங்க கவசம்” அணிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற 16-ந் தேதி அன்று ஒரே நாளில் கார்த்திகை திருவிழா தொடக்கமும், கந்த சஷ்டி திருவிழா நிறைவும்நடக்கிறது. இதே வேளையில் வருகின்ற 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா மற்றும் திருக்கார்த்திகைதீப திருவிழா ஆகிய 2 முக்கிய திருவிழாக்கள் இடைவிடாமல் 17 நாட்கள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது