• Mon. Mar 27th, 2023

சமையல் குறிப்பு

Byகாயத்ரி

Jul 16, 2022

குடைமிளகாய் கீமா

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா – 500 கிராம் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) காய்ந்த வெந்தய கீரை – 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் (அடித்தது) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, குடைமிளகாய் போட்டு மீண்டும் 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். அடுத்து, கீமாவை நன்கு நீரில் கழுவி வாணலியில் போட்டு, கீமாவுடன் அனைத்து பொருட்களும் ஒன்று சேருமாறு 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் மிளகாய் தூள், வெந்தயக் கீரை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். இறுதியில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து, மட்டன் வெந்து, நீர் ஓரளவு சுண்டியப் பின் இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான குடைமிளகாய் கீமா ரெடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *