• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 20, 2022

அவல் பொங்கல்:

தேவையான பொருட்கள் :
அவல் -1 கப், பாசிப்பருப்பு- 1ஃ4 கப், நெய் மற்றும் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி இஞ்சி துருவியது-2 தே .க (பாதி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1ஃ4 இரண்டு பங்காக்கிக்கொள்ளவும் (பாதி வேகவைக்க பாதி தளிக்க), மிளகுதூள்-1ஃ4 டீஸ்பூன், தளிக்க, மிளகு-1ஃ4 தே .கசீரகம் -மேற் கூறியதில் பாதி அளவு முந்திரிப்பருப்பு-1 மேஜைக்கரண்டி, பச்சைமிளகாய்-2 கீறியது, கறிவேப்பிலை-1 கொத்து

செய்முறை:
பாசிப்பருப்பை வானலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து, தண்ணீர் விட்டு,பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேகவைத்துக்கொள்ளவும். அவலை நன்கு அலசி 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.

வானலியில் நெய் விட்டு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளவும்.பாதி துருவிய இஞ்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு அதன் தண்ணியோடு சேர்த்து நன்கு கிளறவும். மிதமான தீயில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து,சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும். சுவையான அவல் பொங்கல் தயார்.