
விலைவாசி உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பருப்பு வகைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, ‘பாரத் தால்’ திட்டத்தினஅ கீழ், ஒரு கிலோ கடலை பருப்பை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கினார். டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் உள்ள தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (NAFED) சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் கடலை பருப்பு மலிவு விலையில் விற்கப்படுகிறது.
இது NCCF, Kendriya Bhandar மற்றும் மதர் டெய்ரியின் Safal-இன் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கடலை பருப்பு மலிவு விலையில் கிடைக்கும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பியுஷ் கோயல் ‘பாரத் தால்’ என்ற பிராண்டின் கீழ், ஒரு கிலோ மூட்டைக்கு 60 ரூபாய் என்ற விகிதத்தில் கடலை பருப்பின் விற்பனையை தொடங்கியுள்ளார்.
இது தவிர, மானிய விலையில் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை, ஒரு கிலோ ரூ.55 என்ற விலையில் கடலை பருப்பு வழங்கப்படும். ‘பாரத் தால்’ அறிமுகமானது, அரசாங்கத்தின் கையிருப்பு பருப்புகளை, சனாப் பருப்பாக மாற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு மலிவு விலையில் பருப்பு வகைகள் கிடைக்க மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கையாகும். துவரம் பருப்பின் சில்லறை விலை கடுமையாக உயர்ந்துள்ள நேரத்தில், சனா பருப்பை மானிய விலையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள NCCF, Kendriya Bhandar மற்றும் Safal ஆகியவற்றின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் விற்பனை மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டின் கீழ், மாநில அரசுகளின் நலத் திட்டங்களுக்காகவும், காவல்துறை, சிறைச்சாலைகளின் கீழ் வழங்குவதற்காகவும், நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள் மூலம் விநியோகிக்கவும் கடலை பருப்பு கிடைக்கிறது.
அறிக்கையின்படி, இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகை, கடலை பருப்பு. இது நாட்டில் பல வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது. இந்த பருப்பில் பல ஊட்டச்சத்து ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம் பீட்டா கரோட்டின் மற்றும் கோலின் ஆகியவை மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. ரத்த சோகை, ரத்த சர்க்கரை, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றைக் கட்டுப் படுத்துவதற்கும் மன ஆரோக்கியத்திற்கும் கூட அவசியம்.
