

சோழவந்தான் வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோழவந்தானில் சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சுமார் 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு வர்த்தகர் சங்கம் உள்ளது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவராக ஆர். ஜவகர்லால், செயலாளராக ஆதி பெருமாள், பொருளாளராக எம். கே. முருகேசன், துணைதலைவர்களாக ராமர் என்ற ராஜ்குமார், துணைச் செயலாளர்களாக ஐ. மணிகண்டன். எண். ரவி நாராயணன், கௌரவ ஆலோசர்களாக எம்.கல்யாண சுந்தரம், சுரேஷ் என்ற பாலசுப்ரமணியம், டி. அருள் ராஜா, எம். சரவணகுமார் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவது வர்த்தகர்கள் வளர்ச்சி பாதுகாப்பு மற்றும் கடமைகள் குறித்து பேசினர். செயற்குழு உறுப்பினர் கேசவன் நன்றி கூறினார்.
