• Mon. Mar 17th, 2025

ஹெல்மெட்டுக்கு தக்காளி இலவசம் அசத்தும் வியாபாரி..!

Byவிஷா

Jul 17, 2023

‘தலைக்கு ஹெல்மெட் முக்கியம் சமையலுக்கு தக்காளி முக்கியம்’ என்ற வாசகங்களுடன் விவசாயம் காப்போம் என்பதை வலியுறுத்தி, சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசம் வழங்கப்படும் என அறவித்து வியாபரம் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வதைப் போல, தக்காளி விளையும் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சமையலில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ள தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
ஹெல்மெட் வியாபாரம் செய்து வரும் சேலத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர் ஹெல்மெட்டுக்கு தக்காளி இலவசமாக கொடுக்கும் சிறப்பு சலுகை ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளார். இது குறித்து அவருடைய விளம்பரத்தில் தலைக்கவசம் என்பது உயிர் கவசம் மற்றும் விவசாயத்தை காப்போம் என்பதை வலியுறுத்தி தலைக்கு ஹெல்மெட் முக்கியம் சமையலுக்கு தக்காளி முக்கியம் என்று 349 ரூபாய்க்கு ஒரு ஹெல்மெட் வாங்கும் நபர்களுக்கு ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இவருடைய நூதன விற்பனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.