• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பட்டாசு விற்பனை: எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக கூறி, பண்டிகை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக உங்களுக்கு பரிசு பொருட்கள் கிடைத்திருப்பதாக கூறி யாரேனும் பணம் கேட்கவோ, ஒ.டி.பி(OTP) எண் பகிரவோ அல்லது அவர்கள் செல்போனிற்கு அனுப்பும் லிங்க் கிளிக் செய்யவோ கூறினால் அவ்வாறு செய்ய வேண்டாம். இதுதொடர்பாக தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்யவோ, நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இதுபோன்ற மோசடிகள் குறித்து இணையதள முகவரியான https://cybercrime.gov.in சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்: 1930 புகார் தெரிவிக்கலாம்.