

தென்னிந்திய நடிகைகளில் தியானம், யோகா இவற்றைப் பற்றி அதிகமாக பேசிவந்தவர் நடிகை அனுஷ்கா சர்ச்சைகளில் சிக்காதவர் அவரைப் போன்றே வாழ்க்கை பற்றிய அனுபவங்களை திரைப்பட விழாக்கள், சினிமா சம்பந்தமான பேட்டி களில் பெண்களுக்குகூறத்தொடங்கியுள்ளார் மருத்துவரும், முன்னணி நடிகையுமான சாய்பல்லவி
செய்யும் பணியினால் சுற்றி இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடிந்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஒரு நடிகையாக எனது நடிப்பின் மூலம் மற்றவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. மகிழ்ச்சியாக இருக்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு நாம் நடித்துள்ள படத்தின் மூலம் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும். இப்படி யோசித்துத்தான் கதைகளை நான் தேர்வு செய்கிறேன்.
நடிப்பு, நடனம், மருத்துவம் இதை தவிர்த்து எனக்கு மிகவும் ஆர்வத்தை கொடுக்கும் விஷயம் தியானம். என்னைப் பற்றி என்னை சுற்றி இருக்கும் நிலைமைகளைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.முக்கியமாக என்னைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்த தலைமுறை பெண்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உங்களை நீங்கள் கவுரவித்து கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நேசியுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அப்படி இருந்தால்தான் மற்றவர்கள் மீது உங்களுக்கு ஒரு நேர்மறையான உணர்வு ஏற்படும்” என்றார்.
