

கானா பாடலில் 8 வயது சிறுமி குறித்து ஆபாசமாக பாடியதால் சரவெடி சரண் என்ற கானா பாடகர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 25 வயதான சரவணன், கானா பாடல்களை பாடி, அதனை யூடியூபில் சரவெடி சரண் என்ற பெயரில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட ஒரு கானா பாடல் வீடியோவில் 8 வயது சிறுமியை கற்பமாக்குவேன் என ஆபாசமாக பாடியதால் அது சர்ச்சையை கிளப்பியது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி வருண் குமார் கவனத்திற்கு பொதுமக்களால் ஒரு புகார் மனு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு எஸ்ஐ மனோஜ் குமார் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் சரவெடி சரண் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.
சைபர் கிரைம் போலீசார் சரவணனை விசாரணை நடத்தினர். பின்னர், சரவனனை எச்சரித்து விட்டு, அவரை பிணையில் விடுவித்தனர்.
