மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மற்றும் தென்கரை ஊராட்சி பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக இருப்பது வைகை பாலம் மதுரை வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து சோழவந்தான் வழியாக தென்கரை முள்ளி ப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி விக்கிரமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் குருவித்துறை குரு பகவான் கோவில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய முக்கியமான திருத்தலங்களுக்கு செல்லக்கூடியவர்களும் இந்த பாலத்தை கடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இந்த நிலையில் இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்து எரியாத நிலையில் மாலை 6:00 மணிக்கு மேல் பாலத்தை கடந்த செல்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சோழவந்தானில் இருந்து தென்கரைப் பகுதிக்கு செல்லக்கூடியவர்கள் இந்த பாலத்தில் நடந்த செல்லும் நிலையில் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எறியாமல் இருப்பதாக தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த நிலையில் அது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் பாலத்தின் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் சிறப்பு வகுப்புகள் முடிந்து 6 மணிக்கு மேல் தென்கரை முள்ளி பள்ளம் பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சோழவந்தான் தென்கரை வைகை பாலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பழுதடைந்து மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




