• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஜெனகை நாராயணபெருமாள் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Oct 4, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஜெனகை நாராயண பெருமாளுக்கு நாள் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இரவு சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஜெனகை நாராயண பெருமாள் ஊர்வலமாக வந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வழிநெடுக ஏராளமானோர் பெருமாளுக்கு தேங்காய் உடைத்து தீபம்ஏற்றி வழிபட்டனர்.

முக்கியமாக பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு, முத்துக்குமரன் நகை மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவிலை வந்தடைந்த ஜெனக நாராயண பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்து சென்றனர். செயல் அலுவலர் தலைமையில் முரளிதரன் உள்ளிட்ட பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பார்த்தசாரதி தலைமையில் அர்ச்சர்கள் பூஜைகள் செய்தனர்.