மதுரை மாவட்டம் சோழவந்தானில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் நிறைவு நாளில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நாட்டு நல பணி திட்ட அலுவலர் கீதா தலைமை தாங்கினார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தீபா முன்னிலை வகித்தார். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி மற்றும் பூவலிங்கம் சதீஷ் உள்ளிட்ட
பேரூராட்சி பணியாளர்கள் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





