• Sat. Feb 15th, 2025

S.ராஜேஷ்குமார் MLA, 50 வது பிறந்த தினவிழா

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமாரின் அகவை 50 விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், S.ராஜேஷ்குமார் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வள்ளவிளை முதியோர் இல்லத்தில் வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் N.ஜார்ஜ் ராபின்சன் தலைமையில், முதியோர் இல்ல அருட்சகோதரிகள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் S. ராஜேஷ்குமார் MLA, மென்மேலும் பல உயரங்களை எட்டவும் நலமுடன் வளமுடன் வாழவும், பிரார்த்தனை செய்யப்பட்டு கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கபட்டு கொண்டாடப்பட்டது.

பின்னர் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில், காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் Dr. VM.பினுலால் சிங்
அகில இந்திய மாணவர் காங்கிரஸ் ( NSUI ) தேசிய செயலாளர் .JB.அபிஜித்
மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் VC.ஷாஜன் கிறிஸ்டா, மற்றும்
காங்கிரஸ் பேரியக்க மாவட்ட, வட்டார, பேரூராட்சி, ஊராட்சி, நிர்வாகிகள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.